Tamil

1

இடம் மாறிய கர்ப்பம் என்றால் என்ன?

கர்ப்பப்பைக்கு வெளியே கர்ப்பம் தரித்தலை இடம் மாறியகர்ப்பம் எனக்கூறலாம்.

இந்நிலை நூற்றில் ஒரு (1:100) கர்ப்பத்தில் உண்டாகலாம்.

அதிகமாக இந்நிலை கர்ப்பபையின் குழாயில் தான் உண்டாகின்றது.

இடம்மாறிய கர்ப்ப நிலையினால் நோயாளியின் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம்.

2

இடம்மாறிய கர்ப்பம் எற்படக் காரணங்கள் என்ன?

சாதாரணமாக கருவுற்ற முட்டை ஆறு அல்லது ஏழு நாட்கனிளில் சூலகத்திலிருந்து கர்ப்பப்பையின் குழாயினூடாக கர்ப்பபையை சென்றடையும்.

இடம்மாறிய கர்ப்ப நிலையில் கருவுற்ற முட்டை கர்ப்பப்பைக் குழாயில் தங்கி விடுவதால் கர்ப்பப்பையைச் சென்றடைவதில்லை.

இந்நிலையை நேரந்தாளாமல் கண்டு பிடித்து சிகிட்சை அளிக்கா விட்டால் கர்ப்பப்பைக்குழாய் வெடித்து உடலுக்குள் இரத்தக்கசிவு எற்பட்டு நோயாளி மயக்கமடையலாம். சிலவேளைகளில் உயிகுக்கும் ஆபத்து ஏற்படலாம். கர்ப்பைக்கு வெளியே கர்ப்பப்பைக் குழாயைத்தவிர வேறு இடங்களிலும் கர்ப்பம் உண்டாகலாம். ஆனால் இடம் மாறிய கர்ப்பம் சரியான வனர்ச்சியை அடைவதில்லை.

பெரும்பாலான இடம்மாறிய கர்ப்பநிலைகள் ஏற்படக் காரணங்கள் என்னவென்று தெரிவதில்லை.

பாலியல் உறவினூடாகப் பரவும் தொற்றுதோய்கள் () கர்ப்பப்பைக் குழாய் கலைப்பாதித்து குழாய்களளில் அடைப்பை ஏற்படுத்தியிருக்கலாம் அல்லது குழாய்கள் சுருங்கியுக்கலாம். என்நிலையின்மிகமுக்கியமான காரனம் கிலமீடியா எம்னும் உடலுறிவு மூலம் பரவும் கிருமியால் ஏற்படும் தொற்று நோய்தான்.

3

இடம் மாறிய கர்ப்ப நிலையின் அறிகுறிகள் என்ன?

இந்த நிலையிள் அறிகுறிகளை இலகுவில் அடையாளம் காண முடிவதில்லை.

முக்கியமாக கவனிக்கவேண்டியவை கீலே தரப்பட்டுள்ளன.

1)மாதவிடாய் வராமலிருப்பது.

2)கார்ப்பப் பரிசோதனை-மெய்.

3)ஒரு பக்க வயிற்றுவலி

இடம்மாறிய கர்ப்பம் உள்ளபக்கத்தில் தான் வலி இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை.

4)தோள் மூட்டு வலி.

5)இயல்புக்கு மாறான இரத்தக்கசிவு.

6)வயிற்றோட்டம் அல்லது மலங்கழிக்கும் போது வலி.

7)மயக்கம்

தலைச்சுற்று

4

இடம் மாறிய கர்ப்பம் தரிப்பதற்கு

அதிக வாய்ப்புக்கள் பெற்றவர் யார்?

கர்ப்பம் தரிக்கக்கூடிய பெண்கள் எல்லோருக்கும் இடம்மாறிந கர்ப்பம் உண்லாவதற்கான வாய்ப்பு உண்டு. அத்துடன் கீலே தரப்படிருக்கும் காரணங்கள் உள்ளவர்களுக்கு மேலதிக வாய்ப்பு உண்டு.

1)வயது 25முதல் 34வயதுக்குட்பட்டவர்கள்.

2)தொற்று நோயினால் பாதிக்கப் பட்டவர்கள்.

3)வயிற்றில் சத்திரசிகிட்சை பெற்றவர்கள் குறிப்பாக (————-).

4)கர்ப்பத்தடைச்சுருள் பாவிப்பவர்கள் (———)

5)புறோஜஸ்ரெறோன் கோர்மோன் {——–} தனித்துள்ள கர்ப்பத்தடை மாத்திரைகள் பாவிப்பவர்கள்.

6)செயற்கைமுறையில் கர்ப்பம் அடைய (—-) முயற்சிப்பவர்கள்.

7)ஏற்கனவே இடம் மாறிய கர்ப்பம் தரித்தவர்கள்

8)புகை பிடிப்பவர்கள் (——-)

5

இடம் மாறிய கர்ப்பநிலையைக் கண்டுபிடிப்பது எப்படி?

பெண்குறிக்கு உள்ளே எடுக்கப்படும் ஸ்கான் மூலம் கர்ப்பபையையும், சூலகத்தையும் கர்ப்பப்பைக்குழாய்களையும் பார்வையிடலாம். ஆனால் இடம்மாறிய கர்ப்பத்தை முழுமையாக எல்லாசந்தர்ப்பங்களிலும் பார்வையிடமுடியாது.

நாற்பத்தெட்டு (48) மணித்தியால இடைவெளியில் செய்யப்படும் இரண்டு இரத்தப்பரிசோதனைகள் இடம்மாறிய கர்ப்பநிலையைக்கண்டு பிடிப்பதற்கு உதவியாக இருக்கும்.

6

இடம் மாறிய கர்ப்பநிலையின் சிகிச்சை என்ன?

வழக்கமாக மூன்று வகையான சிகிச்சைகள் மூலம் இடம் மாறிய கர்ப்பநிலையைக் குணப்படுத்தலாம்.

1) சத்திரசிகிட்சை மூலம் பாதிக்கப்பட்ட கர்ப்பப்பைக் குழாயை எடுத்து விடலாம். வழக்கமான சத்திரசிகிட்சை அல்லது (லப்பறோஸ்கோப்பி) எனப்படும் (—–) பூட்டில் உள்ள துவாரசத்திரசிகிட்சை மூலம் இடம்மாறிய கர்ப்பத்தை நீக்கிவிடலாம்.

2) மீத்கோரெக்ஸ்றேற் (——-) என்ப்படும் மருந்து மூலம் இலம்மாறிய கர்ப்பத்தைக் குணப்படுத்தலாம். இம்மருந்து இடம் மாறிய கர்ப்பத்தின் வளர்ச்சியை நிறுத்திவிடும். வைத்தியசாலையில் அனுமதித்து மிக்க சிரத்தையுடன் கவனிக்க வேன்டியது அவசியம்.

3) அரிதான சிறு வேளைகளில் இட்ம்மறிய கர்ப்பம் சிறிதாக இருந்தால் மருந்துகளும் சத்திர சிகிட்சையும் இல்லாமல் கட்டுப்படுத்தலாம். ஒருவித சிகிச்சையும் இல்லாமால் இயற்கையாகவே இடம்மாறிய கர்ப்பம் மறையும் வரை ஸ்கான் (—–) மூள்ம் அவதானிக்க வேண்டும்.

7

இடம்மாறிய கர்ப்பம் சிகிட்சையின் பின்னர் என்ன நடக்கலாம்?

சத்திரசிகிட்சை மூலம் இடம்மாறிய கர்ப்பத்தை எடுத்துவிட்டால் விரும்பிய நேரத்தில் இன்னும் ஒரு கர்ப்பம்தரிக்கவும் முயற்சிக்கலாம்.

மீத்தோரெக்றேற் மருந்து மூலம் சிகிட்சையளிக்கப்பட்டால் மூன்று அல்லது ஆறு மாதம் வரை கர்ப்பம் அடையாமல் இருத்தல் நல்லது.

அடுத்தமுறை கர்ப்பம் அடையும் பொழுது 7 கிழமைகளில் குடும்ப வைத்தியர் ஊடாக ஸ்கான் (——-) செய்து கர்ப்பப்பையில் தான் கர்ப்பம் தங்கியுள்ளதா என்று உறுதிப்படுத்தல் வேண்டும்.

ஒருமுறை இடம் மாறிய கர்ப்பம் உண்டாகியிருந்தால் எதிர்காலத்தில் பிறக்கும் பிள்ளைகளுக்கு ஒருவித பாதிப்பும் இருக்காது.